சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

vinoth
புதன், 16 ஜூலை 2025 (13:50 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘கருப்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘திங்க் ம்யூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments