மலையாளப் படத்தின் ரீமேக்கில் சூர்யா மற்றும் கார்த்தி? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (07:04 IST)
மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். விரைவில் இது தமிழில் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரங்களில் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments