பாராட்டுகளைக் குவித்த ஆர்ட்டிகிள் 15 தமிழில் ரீமேக்- இயக்குனர் மற்றும் ஹீரோ இவர்கள்தான்!

வெள்ளி, 22 மே 2020 (17:43 IST)
ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் அனுபம் சின்ஹா இயக்கிய பாராட்டுகளைப் பெற்ற ஆர்ட்டிகிள் 15 என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்டிக்கிள் 15ன் படி இந்தியாவில் இருக்கும் அனைத்தும் மனிதர்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை எதார்த்தமோ வேறாக உள்ளது. அதை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக கடந்த ஆண்டு வெளியானது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படம்.

நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்க, உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாஸ்க் அணிந்து மருத்துவமனை வந்த அஜித்-ஷாலினி: இண்டர்நெட்டில் வீடியோ வைரல்