Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் “அருவா”

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:21 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘அருவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இவர் ஹரி படங்களுக்கும் இதுவரை இசையமைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஏப்ரலில் தொடங்கி முடித்து இந்த வருட தீபாவளிக்கு வெளியிடப்போவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments