தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென தற்போது அந்த திரைப்படம் மே மாதத்துக்கு தள்ளிப் போட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மெதுவாக நடந்து வருவதாகவும் இன்னும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தயாரிப்பு தரப்புக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’மாஸ்டர்’ படம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்துக்கு தள்ளி போக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம், ஒருவேளை ’மாஸ்டர்’ திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ஆம் தேதியில் வெளிவரவில்லை என்றால் அந்த தேதியில் வெளியிட தற்போது ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து ’மாஸ்டர்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது