ப்ரோமோ ஷூட்டோடு படத்தை ஆரம்பிக்கும் ‘சூர்யா 47’ படக்குழு!

vinoth
சனி, 22 நவம்பர் 2025 (12:27 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு  சூர்யா சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘வேட்டைக் கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து லக்கி பாஸ்கர் புகழ் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு சூர்யா அடுத்து ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நஸ்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு சூர்யா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். டிசம்பர் 8 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட் கேரளாவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் முதலில் படத்துக்கான ப்ரமோஷன் வீடியோவைப் படமாக்க உள்ளார்களாம். ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

ப்ரோமோ ஷூட்டோடு படத்தை ஆரம்பிக்கும் ‘சூர்யா 47’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments