சூர்யாவுக்கு வில்லன் ஆகிறாரா பாலிவுட் நடிகர் அனில் கபூர்?

vinoth
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (07:56 IST)
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்துக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு பயோபிக் படம் என்று தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அதை இயக்குனர் வெங்கட் அட்லூரி மறுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சில நாட்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் வேடத்தில் அனில் கபூர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக்கின் மார்க்கெட்டை அவரேதான் அழித்துக் கொண்டார்… பிரபல நடிகர் & இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?... உலகக் கோப்பை எல்லாம் பெரிதில்லை – ரொனால்டோ கருத்து!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி- சுந்தர் சி கூட்டணி… என்ன எதிர்பார்க்கலாம்?

ப்ரதீப்பை நான் ஒரு ஸ்டாராகதான் பார்க்கிறேன்… சக நடிகர் கவின் பாராட்டு!

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments