Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவின் உருக்கமான ட்விட்! சமாதானப்படுத்தும் ரசிகர்கள்!

Advertiesment
சூர்யாவின் உருக்கமான ட்விட்! சமாதானப்படுத்தும் ரசிகர்கள்!
, வெள்ளி, 31 மே 2019 (12:32 IST)
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்.ஜி.கே பூர்த்தியடைய செய்ததா என்றால்...? இல்லை என்று தான் சொல்லமுடியும். 
 


 
படத்தின் ரிசல்ட் பின்வாங்கியுள்ளதை அறிந்த நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, "அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது.   அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். 
 
webdunia

 
சூர்யாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து விட்டனர்.  "எது நடந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் தலைவா, இது அடிச்சு தூக்கும் நேரம். கவலைப்படாதீர்கள், இது தானா சேர்ந்த கூட்டம் என்றும் அப்படியே தான் இருக்கும். என்.ஜி.கே. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று தெரிவித்துள்ளனர். 

webdunia

 
என்.ஜி.கே. படத்தில் சூர்யாவின் நடிப்பு அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவு தான் என்று மற்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படம் பிளாப் தான் என்று படத்தை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர் . மேலும் சமூகவலைத்தளங்களில் "கட்அவுட் மட்டும் உயரமா இருந்தா பத்தாது, படம் தரமா இருக்கணும், நல்லா இருந்தா மக்களே உயரத்தில் கொண்டு போய் வைப்பாங்க" என்று விமர்சித்து வருகின்றனர். 
 
என்ன நடந்தாலும் சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதை விட ஒரு நடிகனுக்கு எண்ணவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கையின் குழந்தையுடன் சிம்பு! முதன்முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படம்!