Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (13:51 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கான பாராட்டு விழா வணங்கான் படத்தின் ஆடியோ ரிலீஸோடு நடந்தது. அதில் சூர்யா கலந்துகொண்டு பாலா பற்றி புகழ்ந்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சூர்யா பாலா உறவு பற்றி பேசும்போது “சூர்யா சார் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தபோது ஒரு கட்டத்தில் அதைத் தொடரமுடியாது என உணர்ந்தார். அதற்காக 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தும் அவர் பாலா சார் அதேக் கதையை வேறு ஒரு கம்பெனிக்கு இயக்க தடையில்லாச் சான்றிதழ் கொடுத்தார். அவர் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. அந்த அளவுக்கு பாலா மீது அவர் மரியாதையும் அன்பும் வைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஜமௌலி & மகேஷ் பாபு படத்தில் இணையும் ஹீரோயின் இவர்தானா?

விடுதலை 2 ஓடிடியில் ரிலீஸாகும் போது ஒரு மணிநேரம் கூடுதலாக இருக்கும்… வெற்றிமாறன் அப்டேட்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன்… வைரமுத்து பகிர்ந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ‘ஓடிடி’ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments