ஆடு ஜீவிதம் படத்தை மிஸ் செய்த சூர்யா…இயக்குனர் சொன்ன தகவல்!

vinoth
புதன், 20 மார்ச் 2024 (13:54 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்நாவலை இயக்குனர் பிளஸ்சி திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கொரோனா காலத்தில் அரபு நாடுகளில் படமாக்கப்பட்டது.

இந்த படம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து வரும் மார் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி கலந்துகொண்ட ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் “இந்த கதையை நான் முதலில் நடிகர் சூர்யாவைதான் அணுகினேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments