மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல்… வேறு இயக்குனரோடு படத்தை தொடங்கும் சூர்யா!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (07:27 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இடையில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் டெஸ்ட் ஷூட்டும் செய்தார். ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை-2 படத்தின் பணிகள் எதிர்பார்த்தபடி முடியாததால் வாடிவாசல் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் கங்குவா படத்தை முடித்துவிட்டு வாடிவாசலுக்கு முன்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தை தொடங்க சூர்யா முடிவு செய்துள்ளாராம். இந்த படம் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சொலல்ப்படுகிறது. இதனால் வாடிவாசல் அடுத்த ஆண்டுதான் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments