Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

Siva
வெள்ளி, 2 மே 2025 (21:00 IST)
சூர்யா நடித்த ’ரெட்ரோ’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் அதிரடி சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே பட்ஜெட்டின் பாதிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ரெட்ரோ’ படம் ஒரே நாளில் ரூ.46 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.17 கோடி வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
 
இது சூர்யாவின் திரைப்படங்களில் முதல் நாளிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய வசூல் சாதனையாகும். இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.65 கோடி என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆனதால், தயாரிப்பாளர்களுக்கு முதல் நாளிலேயே நல்ல லாபம் சம்பாதித்துள்ளனர்.
 
மேலும்,  வார இறுதி விடுமுறை உள்ளிட்ட நான்கு நாட்களில் படம் ரூ.100 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மொத்தத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்கு இது மிகப்பெரிய வெற்றிப் படம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

பேச்சிலர் நாயகி திவ்யபாரதியின் ஹாட்& க்யூட் போட்டோஸ்…!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச் வினோத்… இயக்குனராக ‘மகளிர் மட்டும்’ பிரம்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments