கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்த படம் முதல் நாளில் இந்திய அளவில் 19 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. ஆனால் இரண்டாம் நாளில் வசூல் பாதியாகக் குறைந்து 8 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. அதையடுத்த மூன்றாம் நாள் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றும் 8 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்தது.
இதையடுத்து நேற்று நான்காம் நாளான ஞாயிற்றுக் கிழமையும் சுமார் 8 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்துள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களில் தோராயமாக 43 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக டிராக்கிங் தளமான sacnilk தெரிவித்துள்ளது.