Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:07 IST)
சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் அடுத்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் செய்தி கடந்த சில தினங்களாக வைரலாகப் பரவி வரும் நிலையில் இந்த படம் பற்றி மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொல்லியிருந்தார். ஆனால் அந்த கதை அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அதே கதையைதான் மாற்றி இப்போது சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் வாடிவாசல் படத்துக்கு முன்பாக குறுகிய கால படமாக இதை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைக்க ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது உறுதியானால் 24 படத்துக்குப் பிறகு சூர்யா ரஹ்மான் இணையும் படமாக இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா & விக்ரம்… வேள்பாரி பற்றி பரவும் தகவல்!

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்… புது தேதியை அறிவித்த ஹாட்ஸ்டார்!

SPB வசித்த தெருவுக்கு அவரின் பெயர் சூட்டிய தமிழக அரசு…SPB சரண் நன்றி!

நந்தன் படத்துக்கு தமிழக அரசின் உயரிய விருது வழங்கப்படவேண்டும்… இயக்குனர் அறம் கோபி பரிந்துரை!

கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஏதாவது ஆனா முதல் குற்றவாளி கணவன் தான்: ‘பிளாக்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments