Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிழந்த தன் ரசிகர்களின் குடும்பத்திற்கு உதவுவதாக சூர்யா உறுதி!

Advertiesment
Suriya is committed to his fans family
, திங்கள், 24 ஜூலை 2023 (18:04 IST)
பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 ரசிகர்களின் குடும்பத்திற்கு உதவி செய்தவதாக  நடிகர் சூர்யா உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா. இவரது பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் கொண்டாடினர். இவருக்கு தமிழகம், கேரளம் மட்டுமின்றி ஆந்திராவிலும் ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று ஆந்திர மாநிலம் பால்நாடு மாவட்டம் நர்சாராவ் பேட்டை  மண்டலத்தில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில்  நேற்று அதிகாலை சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் ஒடகட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, பேனர் இரும்பு கம்பியாக இருந்ததால், அருகில் இருந்த மின்சார ஒயர் மீது உரசி மின்சாரம் பாய்ந்தது.

இதில், வெங்கடேஷ் (19 வயது) மற்றும் சாய் (20 வயது) சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் நேற்று சூர்யாவின் பிறந்த நாளுக்காக பேனர் தாக்கி உயிரிழந்த 2 ரசிகர்களின் குடும்பத்தினருடன்  வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட நடிகர் சூர்யா, ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ''நா ரெடிதான் வரவா'' பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் டான்ஸ்...