Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா கௌதம் கூட்டணியில் மீண்டும் உருவாகிறதா காக்க காக்க 2?... வில்லன் இவரா?

சூர்யா கௌதம் கூட்டணியில் மீண்டும் உருவாகிறதா காக்க காக்க 2?... வில்லன் இவரா?
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:57 IST)
நடிகர் சூர்யா திரையுலகில் 1996 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 2002 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படம்தான் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்ற அவரின் முதல் திரைப்படம். அதுவரை சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவித்த அவருக்கு முதல் வசூல் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சமீபத்தில் சூர்யா மற்றும் கௌதம் மேனன் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தில் வில்லனாக நடிக்கவைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரு நம்பர் 1… தில் ராஜு கருத்துக்கு ‘நச்’ பதிலளித்த போனி கபூர்!