இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:27 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு சூர்யா, த்ரிஷா மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிக்கும் க்ளைமேக்ஸ் காட்சியை ஆர் ஜே பாலாஜி படமாக்கி வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments