Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாகாவரம் பெற்றவனின் கதையா சூர்யா 42?.. இணையத்தில் பரவும் தகவல்!

Advertiesment
சாகாவரம் பெற்றவனின் கதையா சூர்யா 42?.. இணையத்தில் பரவும் தகவல்!
, புதன், 22 மார்ச் 2023 (14:25 IST)
நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை சூர்யா படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத்திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து சாகாவரம் பெற்று வாழ்பவன் ஒருவனுக்கு இப்போது நடக்கும் சம்பவங்களும் பிரச்சனைகளுமே கதைக்களனாக உருவாக்கப்பட்டுள்ளது என சமூகவலைதளங்களில் அதிகாரப் பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுட்யூபர் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக்‌ஷீப்… ரி எண்ட்ரி கொடுக்கும் அபிராமி!