Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:41 IST)
பிரபல நடிகர் சித்தார்த்திற்கு இலண்டனில் அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவர் நடித்த படத்தின் இயக்குனர் ஒருவர் உறுதி செய்துள்ளார்
 
சித்தார்த் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் திரைப்படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை
 
இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் அஜய் பூபதி என்பவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சித்தார்த்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் அவர் லண்டன் சென்று இருப்பதாகவும் அதனால் அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார்
 
நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரது உடலுக்கு என்ன என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் சித்தார்த் பதிலளிப்பார் என்றும் மகா சமுத்திரம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் நடித்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments