Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு தோனி செய்யப்போகும் ப்ரமோஷன் உதவி!

vinoth
ஞாயிறு, 6 ஜூலை 2025 (10:13 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன. ஆனால் இறுதிகட்டத்தில் சி எஸ் கே அணியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த அணியில் இருந்து விலகி, பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார். இப்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமானவரான ரெய்னா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். லோகன் என்பவர் இயக்கும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரெய்னா ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக விழா விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. அந்த அறிமுக விழாவில் தோனி கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அந்த படம் அதிகளவில் ரசிகர்களிடம் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கன்னட மொழி பற்றி இனி வாயே திறக்கக் கூடாது! - கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments