சிம்பு உடல் எடைக் குறைத்ததால் நஷ்டம்தான்… ஆனால் ? தயாரிப்பாளர் கருத்து!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:22 IST)
மாநாடு படத்துக்காக சிம்பு எடை குறைத்ததால் எங்களுக்கு நஷ்டம்தான் என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் மற்றொரு அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளதாம். இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் போது சிம்பு மிகவும் அதிக எடையோடு குண்டாக இருந்தார். அந்த உடலோடு 15 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினர். ஆனால் லாக்டவுனுக்கு பிறகு முழுவதுமாக உடல் எடைக் குறைத்து மிகவும் ஒல்லியாகினார். இதையடுத்து முன்னர் படம்பிடித்த காட்சிகள் திரும்ப படமாக்கப்பட்டன.
இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘ அது எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால் அதை நாங்கள் படத்தின் தரத்தில் ஈடுசெய்துள்ளோம். ஒரு தயாரிப்பாளராக எனக்கு படத்தின் தரமே முக்கியம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments