மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அந்த காட்சிகளைப் பார்க்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 
									
										
			        							
								
																	படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் இணையத்தில் திருட்டு தனமாக வெளியாகின. இதையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு. தயவு செய்து இன்னும் ஒருநாள் காத்திருங்கள் எனக் கூறியிருந்தார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வேறெதிலும் பார்க்க மாட்டோம்... திரையரங்கில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாயிருங்கள். இது உதிரி அல்ல. பலபேரின் உதிரம்...  என அறிவுறுத்தியுள்ளார்.