Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் பாடல் !

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:48 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வாரு பாட்டா ' படத்தில் இடம்பெற்ற #Kalaavathi   என்ற முதல் சிங்கில் கடந்த பிப்ரவரி மாதம்  ரிலீஸான நிலையில் இப்பாடம் புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள  காலாவதி என்ற பாடலை சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இப்பாடல் இணையதளத்தில் வைரலான நிலையில்,  இப்பாடம் ஒரு மாதத்தில் சுமார் 100 மில்லியன்  பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.  இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்,  #100MillionforKalaavathi  பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதற்கு  -இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில்  சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments