Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக நாயகனை சூப்பர் ஸ்டார் சந்தித்து நலம் விசாரிப்பு!!

உலக நாயகனை சூப்பர் ஸ்டார் சந்தித்து நலம் விசாரிப்பு!!
, புதன், 16 நவம்பர் 2016 (14:18 IST)
சபாஷ் நாயுடு படத்தில் பிசியாக இருந்த கமல், அவரது வீட்டு மாடிப்படியில் இருந்து விழிந்து கால் முறிவு ஏற்பட்டதை அடுத்து ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரின் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

 
அதுப்போல சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைப்பெற்றபோது ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமலை, ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது கமலுடன் அவரது உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா உடன் இருந்தார்.
 
இதுகுறித்து கமலின் உதவியாளர் செல்வா கூறுகையில் கமல், ரஜினி அடிக்கடி சந்தித்து கொள்வதுண்டு. தற்போது இருவரும் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்து ஒருவர்கொருவர் உடல் நலம் குறித்து விசரித்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் பேசி கொண்டனர் எனவும் தெரிவித்தார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகம் சுளிக்காமல் ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்ட அஜித்!