தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் அரசியல் வாதியுமான நடிகர் சிரஞ்சீவி சில ஆண்டுகளுக்கு முன் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	ஆனால் அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை. இதனால் தனது நண்பர்களான கமல் மற்றும் ரஜினிக்கு அவர் அட்வைஸ் செய்தார்.
 
									
										
			        							
								
																	தனது அரசியல் எண்ணம் பொய்த்துப் போனாலும் அவரது தம்பி பவன்     கல்யாண் அரசியலிலும் சினிமாவிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
 
									
											
									
			        							
								
																	இந்நிலையில் இளம் நடிகர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சிரஞ்சீவி புதுவித கெட்டப்பில் இளம் இயக்குநர்களில் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
	இதன்படி சிரஞ்சீவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	இதில் அவர் மொட்டை யடித்துத்து, கண்ணில் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஸ்டைலாகக் காட்சியளிக்கிறார். இப்படத்திற்குக் கீழ் நான் பார்ப்பதற்குத் துறவி போல் தெரிகின்றேனா ? என கேட்டுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	எனவே அடுத்து தன் படத்தில் சூப்பர் ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.