ஐக்கிய நாடுகள் சபை தென்னிந்திய பெண்களுக்கான தூதராக உள்ளார். ஐ.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவின் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஐ.நா சபையின் நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யா தனுஷ் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று, ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடனமாடும் வாய்ப்பை ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,”இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடனமாட உள்ளதை நினைத்து சந்தோஷமும், பெருமையடைகிறேன் என தெரிவித்துள்ளார்.