Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதைக்கு அடிமையானாரா பிரகதி: இணையத்தில் பரவும் வதந்தி

போதைக்கு அடிமையானாரா பிரகதி: இணையத்தில் பரவும் வதந்தி
, சனி, 5 செப்டம்பர் 2020 (18:55 IST)
போதைக்கு அடிமையானாரா பிரகதி: இணையத்தில் பரவும் வதந்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பாடகி பிரகதி குருபிரசாத் அதன் பின்னர் பாலாவின் ’பிதாமகன்’ படத்தில் ஒரு பாடலைப் பாடி திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தற்போது ஒரு சில படங்களில் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் பீச் ஓரத்தில் கவர்ச்சியான உடையை அணிந்த பிரதியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் பிரகதி போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், பணத்திற்காக அவர் கவர்ச்சியான மாடலிங் செய்யவும் தயாராகி விட்டதாகவும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த தகவல் வதந்தியாக மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரகதி ’இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் உண்மை என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அந்த தகவலை வெளியிட்டவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற இழிவான, பயங்கரமான செயல்களில் ஈடுபட வேண்டாம்’ என்றும் பிரகதி கேட்டு கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னைப் போல உருவம் இருப்பவர்களுக்கு வாய்ப்பு – பார்த்திபன் அறிவிப்பு!