Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் படத்தில் குத்தாட்டம் போட உள்ள சன்னி லியோன்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (08:54 IST)
கார்த்திக் நீண்ட நாட்களுக்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளாராம்.

அரசியல் ஆர்வம் மற்றும் சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் கார்த்திக் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அரசியல் கை கொடுக்காததால் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவருக்கு குணச்சித்திர வேடங்களும் வில்லன் வேடங்களுமே கிடைத்தது. அவரது குடும்பத்தில் இருந்த அடுத்த ஹீரோவாக கௌதம் கார்த்திக் அறிமுகமாகி குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளார். தன் மகனோடு சேர்ந்து மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கார்த்திக் நடித்தார். இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் தீ இவன் என்ற  படத்தில் கார்த்திக்கும் அவரது தங்கையாக சுகன்யாவும் நடிக்க இருக்கிறார்கள். இவர்களைத் தவிர இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் டி எம் ஜெயமுருகன் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது ஒரு பாடலை மட்டும் படமாக்க உள்ளதாம் படக்குழு. இந்த பாடலுக்கு ஆட பிரபல நடிகையான சன்னி லியோனை கேட்டுள்ளனராம் படக்குழுவினர். சன்னி லியோ ஏற்கனவே சில பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments