Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன்னிலியோன் சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு? திடுக்கிடும் தகவல்

, வியாழன், 1 ஜூன் 2017 (00:52 IST)
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். அவ்வப்போது இவர் தனது கணவருடன் வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்கும் வழக்க்ம உண்டு.



 


இந்த நிலையில் சமீபத்தில் சன்னிலியோன் தனது கணவருடன் வெளிநாடு செல்ல விமானத்தில் ஏறினார். ஆனால் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மோசமான வானிலை காரணமாக நிலைகுலைந்தது.

ஆனால் விமானி தனது திறமையாலும், அனுபவத்தாலும் விமானத்தை அருகில் இருந்த ஒரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி விமானத்தில் இருந்த பயணிகளை காப்பாற்றினார்.

இதுகுறித்து சன்னிலியோன் தனது டுவிட்டரில், ' நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார். இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டைலிஷ் இயக்குநரை பின்னுக்கு தள்ளிய இளம் இயக்குநர்