Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கான் படத்தில் இணைந்த மற்றொரு பாலிவுட் ஹீரோ!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:36 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் இந்த ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2024 ல் தொடங்க உள்ளதாகவும், 2024 கிறிஸ்துமஸில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளார். அமீர்கான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு லாகூர் 1947 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சன்னி தியோல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments