Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸிட்டிவ் விமர்சனங்களை அடுத்து சித்தா படத்தின் காட்சிகள் அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:31 IST)
கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த படத்தைப் பார்த்த கமல்ஹாசன் அதைப் பாராட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் “நான் சித்தா படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு அம்மா என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் மனதில் பதிய ஒரு கதை சொல்லவேண்டும்.  இறுதியில் அழுத்தத்தோடு செல்லாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் அவர்களை நாம் குழந்தைகளாகவே பார்க்கவேண்டும். இந்த படத்துக்கு மகாநதி படம்தான் ஒரு உந்துதல் என்று படக்குழுவினர் சொன்னார்கள்.அப்படி என்றால் எனக்கு மகாநதியை விட இந்த படம் பிடித்திருக்கிறது.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சித்தா படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இப்போது படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments