Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க படத்த எப்ப வேணா ரிலீஸ் பண்ணிக்குங்க… ஆனா நாங்க தீபாவளிக்குப் போட்டுடுவோம் – சன் டிவி கண்டீஷன்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:49 IST)
டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து குழப்பமான செய்திகளே வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிவிட்ட சன் தொலைக்காட்சி, இனிமேலும் பொறுக்க முடியாது என தீபாவளிக்கு நாங்கள் ஒளிபரப்பிவிடுவோம். நீங்கள் அதற்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துகொள்ளுங்கள் என டாக்டர் படக்குழுவுக்கு கறாராக நிபந்தனை விதித்துள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments