Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

Advertiesment
அல்லு அர்ஜுன்

Siva

, திங்கள், 7 ஏப்ரல் 2025 (18:49 IST)
அட்லி இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தெலுங்குத் திரை உலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு, ஏப்ரல் 8ஆம் தேதி அவரது பிறந்த நாளையொட்டி வெளியாகும் என பல வாரங்களாகவே ஊகங்கள் உருவாகி வருகின்றன.
 
இந்த சூழ்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது சமூக வலைதள பக்கங்களில் "When Mass meets Magic" என்ற வாசகத்துடன் ஒரு  வீடியோவை பகிர்ந்துள்ளது. இதில், நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வீடியோவில், அட்லி அல்லது அல்லு அர்ஜுனின் பெயர் நேரடியாக இல்லாமல் இருந்தாலும், இது அவர்களது கூட்டணியில் உருவாகும் புது திரைப்பட அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த செய்தி உறுதியானதென கூறலாம்.
 
பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்தப் படம், பான் இந்திய அளவில் ஆறு மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், அல்லு அர்ஜுனின் ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.
 
பிரியங்கா சோப்ரா தமிழில்  விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் நடித்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழ்த் திரையில் திரும்ப வருவது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!