தலைவர் படமா? தளபதி படமா? நாளைக்கு பாருங்க! – அப்டேட் குடுத்த சன் பிக்சர்ஸ்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:25 IST)
நடிகர் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களையும் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது, அதில் மெகா அறிவிப்பு என்று தலைப்பிட்டு கீழே நாட்கள் மணி நேரங்கள் ஓடுகிறது. அதில் இன்று, நாளை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 ஆகிய நாட்கள் காட்டப்படுகின்றன. இதனால் இந்த அறிவிப்பு ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் குறித்ததா? அல்லது விஜய்யின் 65வது படம் குறித்ததா? என ரசிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு விவாதித்து வருகின்றனர்.

ஆனால் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாட்களிலும் ஒவ்வொரு அப்டேட் வெளியாகலாம் என்றும் அது அண்ணாத்த மற்றும் தளபதி65 இரண்டு குறித்தும் இருக்கும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments