Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்துகோவிலுக்கு தானம் செய்த இஸ்லாமியர் !

Advertiesment
இந்துகோவில் தானம்
, புதன், 9 டிசம்பர் 2020 (20:55 IST)
பெங்களூர் அருகேயுள்ள பகுதியில் தனது ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆஞ்சநேயர் கோவிலுக்குத்தானமாகக் கொடுத்துள்ளார் ஒருஇஸ்லாமிய முதியவர்.

பெங்களூர் அருகேயுள்ள காடுகோடி பெலதூர் பகுதியில் வசித்து வருபவர் எச்.எம்.பாஷா(65). இவர் வாடகை லாரி தொழிலதிபர் ஆவார்.

இவருக்கு பெங்களூரில் இருந்து 35 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஒசகோட்டே  வலகேரபுராவில் உள்ள பழைய மெட்ராஸ் சாலையில் இவருகு 3 ஏக்கர் நிலம் உள்ளது.

இதற்கு அருகில் ஆஞ்சநேயர் கோவிலுள்ளது. ஆனால் இக்கோவிலுக்குத் தனிப்பாதை இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் இருந்தனர்.

எனவே பாஷவிடம் நிலம் கொஞ்சம் தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற பாஷா 1.5 செண்ட் நிலத்தை கோவிலுக்குத் தானமாக வழங்க முடிவு செய்தார்.

1.5 செண்ட் நிலத்தை அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.இந்த நிலத்தின் மதிப்பு 1 கோடியாகும்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இந்துக்கள் முஸ்லிம்கள் என்ற பாகுபாடு யாரிடமும் காணக்கூடாது. இப்படிப் பாகுபாடுகள் இருந்தால் நாடு முன்னேறுமா ? சில அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உண்டாக்கி சாதி, மத அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்தால்தால் நாடு முன்னேறும் அதனால் நாம் நாட்டை நேசிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எனது நிலத்தை ஆஞ்சிநேயருக்குக் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசரத்துக்கு பயன்படுத்துங்களேன்… தரவுகள் இருக்கா? சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிக்கு மறுப்பு!