Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை… ஆனால் ?- இயக்குனர் சுதா கொங்கரா வெளியிட்ட தகவல்!

நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை… ஆனால் ?- இயக்குனர் சுதா கொங்கரா வெளியிட்ட தகவல்!
, ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:10 IST)
பிரபல விமான நிறுவன அதிபர் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சூரரை போற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் தமிழ் பதிப்பில் நடிகர் சூர்யாவும் இந்தியில் நடிகர் அபிஷேக்பச்சனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தகவல் உண்மையில்லை என சுதா கொங்கரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள சுதா “நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை. ஆனால் அவர் பயோபிக்கை நான் எடுப்பதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு ‘சைத்ய பூமி’ ஆவணப்பட டிரைலர் ரிலீஸ்!