சுதா கொங்கரா அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்.. ஏமாற்றத்தில் தனுஷ்..!

Siva
செவ்வாய், 16 ஜூலை 2024 (18:03 IST)
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சர்ஃபைரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் அவர் புறநானூறு என்ற படத்தை அடுத்ததாக இயக்க திட்டமிட்டு இருந்தார். 
 
இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சூர்யா நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை சிவகார்த்திகேயன் கையெழுத்திட்டுவிட்டதாகவும் அமரன் மற்றும் எஸ்கே 23 படங்களை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. புறநானூறு படத்தின் வாய்ப்பு சிவகார்த்திகேயன் எனக்கு சென்றதால் தனுஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments