Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் ‘ராயன்’ டிரைலர் எப்போது? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Advertiesment
தனுஷின் ‘ராயன்’ டிரைலர் எப்போது? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva

, ஞாயிறு, 14 ஜூலை 2024 (16:22 IST)
தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தை அவரே இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ஜூலை 26 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ஜூலை 16ஆம் தேதி ராயன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் டிரெய்லர் ரிலீஸ் செய்தியுடன் கூடிய ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரித்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தகவல்.. எந்த ஓடிடி? எந்த தேதி?