Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதா சந்திரனுடன் இயக்குனர் மோதல்- நாகினி ஷூட்டிங் நிறுத்தம்

Advertiesment
சுதா சந்திரனுடன் இயக்குனர் மோதல்- நாகினி ஷூட்டிங் நிறுத்தம்
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (12:07 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நாகினி தொடரின் படப்பிடிப்பின் போது நடிகை சுதா சந்திரனுக்கும், இயக்குநர் குஷால் ஜவேரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஷுட்டிங் நிறுத்தப்பட்டது.


 
 
சன் தொலைக்காட்சியில் பிரபலான தொடர் நாகினி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நாடகத்தை விரும்பி பார்த்துவருகின்றனர். இந்த தொடரின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பின்போது நடிகை சுதா சந்திரன் ஸ்கிரிப்ட்டுகள் அடங்கிய பேப்பரை கையில் வைத்திருந்தாராம். இதனை பிடிக்காத இயக்குனர் குஷால் ஜவேரி  நடிகையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பரை கையில் வைத்திருப்பது என்ன தவறு என்று சுதா சந்திரன் கேட்க, தான் ஸ்கிரிப்டை படப்பிடிப்பு தளத்தில் வைத்து படிப்பதில்லை என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஷூட்டிங் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து விரைந்த தொடரின் தயாரிப்பாளர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் தன்னிடம் இயக்குனர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுதா சந்திரன் கூறினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் நான் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்!