விஜய்யின் The GOAT படத்திற்கு திடீர் பிரேக்!

Sinoj
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (20:28 IST)
விஜய்யின் கோட் படத்தின் ஷூட்டிற்கு பிரேக் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

விஜய்  நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவாகி படம் தி கோட் (The Greatest Of All Time). இப்படத்தில்  விஜயுடன் இணியந்து, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், மோகன் உள்ளிட்டோர்  நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத்  தயாரித்து வருகிறது.
 
விஜய்யின் கோட் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்த  நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் ரசிகர்கள் வந்து விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துகள் தெரிவித்து, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து வீடியோ, புகைப்படங்கள் வைரலானது.
 
இப்பட ஷுட்டிற்கு இடையே புதிய அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில்,  விஜய்யின் கோட் படத்திற்கு சில காரணங்களால் பிரேக் விடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1 ஆம் தேதி இப்படத்தின் புதிய பாடலுக்கான ஷூட்டிங்  நடைபெறவுள்ளது.
 
இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments