கண்டதையெல்லாம் காசாக்கத் துடிக்கும் சினிமாக்காரர்கள், டெல்லிவரை அதிர்வலைகளை ஏற்படுத்திய போராட்டத்தை விட்டுவிடுவார்களா என்ன? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம், தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. இதன்மூலம் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களின் மவுசும் குறைந்தது.
இதை அடிப்படையாக வைத்து, தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாராகியுள்ளன. சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’, விஜய் சேதுபதியின் ‘கறுப்பன்’, ஆர்யாவின் ‘சந்தனத்தேவன்’, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் ‘மதுரக்காரன்’ ஆகிய படங்கள்தான் அவை. ஒரிஜினல் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் திரையில் காட்டினால்தானே கெத்தாக இருக்கும்? அதனால், சேனல்களிடம் அப்போது எடுத்த வீடியோக்களைக் கேட்கிறார்களாம்.