ஊரடங்கு போட்டும் இப்படி பண்றீங்களே! – கேள்விகேட்ட ரியாஸ்கான் மீது தாக்குதல்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (10:51 IST)
ஊரடங்கின்போது கூடியவர்களை கலைந்து போக சொன்ன சினிமா நடிகர் ரியாஸ்கான் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வின்னர், நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ரியாஸ்கான். சென்னையில் பனையூர் பகுதியில் வசித்து வரும் ரியாஸ்கான் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டின் அருகே சிலர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடி பேசுவதை தவிர்க்க சொல்லி அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் ரியாஸ்கான். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் எதிர் தரப்பினர் ரியாஸ்கானை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரியாஸ்கான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments