ஆறு தசாப்தங்களாக ஆஸ்கரில் கலக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் படங்கள்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:03 IST)
ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படங்கள் 1977 முதல் தற்போது வரை ஆஸ்கர் பட்டியலில் போட்டியிட்டு வருகின்றன.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். ஜாஸ் ஜுராசிக் பார்க் போன்ற கமர்ஷியல் படங்களை ஒருபுறம் இயக்கி வணிக வெற்றி பெற்றாலும் மறுபுறம் ஷிண்ட்லர் லிஸ்ட் மற்றும் சேவிங் பிரைவேட் ரயான் ஆகிய மனிதநேயமிக்க படங்களையும் இணையாக இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் இயக்கியுள்ள வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ் படம் ஏழு பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதன் மூலம் கடந்த ஆறு சதாப்தங்களாக ஸ்பீல்பெர்க்கின் படங்கள் ஆஸ்கர் விருதில் போட்டியிட்டு வருகின்றனர். கிளோஸ் என்கவுண்ட்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் (1977), ஈடி (1982), ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்(1993), மியுனிக் (2005), லிங்கன் (2013), வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ்(2023) ஆகிய படங்கள் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் கலந்துகொண்டுள்ளன. இதுபோல வேறு எந்த ஒரு இயக்குனருக்கும் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments