Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா இல்லாமல் செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது… முன்னாள் வீரர் புகழாரம்!

vinoth
புதன், 12 பிப்ரவரி 2025 (12:21 IST)
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பும்ரா இல்லாமல் இந்திய அணி 14 பேர் கொண்ட அணியாகவேக் கருதப்படும் என இங்கிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறியுள்ளார்.

அதில் “பும்ராவுக்கு மாற்று வீரரைக் கண்டறிவது இயலாத காரியம். பும்ரா இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பைக்கு செல்வது என்பது ரொனால்டோ இல்லாமல் கால்பந்து உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது. என்னைப் பொறுத்தவரை இப்போது இந்திய அணி 14 பேர் கொண்ட அணிதான். நான் தேர்வுக்குழுவில் இருந்தால் பும்ரா தொடர் முழுவதும் விளையாடவில்லை என்றாலும் இறுதிப் போட்டியன்று காலையிலாவது அவரை அணிக்குள் சேர்த்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தைக் கௌரவித்த தமிழக அரசு!

விஜய்யை வச்சு 300 கோடி ரூபாய்ல படம் பண்ணி 500 கோடி ரூபாய் சம்பாதிக்குறது பெருசில்ல… இயக்குனர் சுசீந்திரன் கருத்து!

யார் அந்த பிரகாஷ்?… வைரலாகும் விடாமுயற்சி மீம்கள்.. பதிலளித்த மகிழ் திருமேனி!

தனுஷ் படத்துடன் ’டிராகன்’ போட்டியா?... பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில்!

கேம்சேஞ்சர் பற்றிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்ட அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments