ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த எஸ்எஸ் தமன் (35 வயது), 1993ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பைரவா தீபம் என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தை துவக்கினார். மிக இளம் வயதிலேயே சினிமா உலகுக்கு அறிமுகம் ஆன தமன், சுமார் 7 ஆயிரம் மேடைகளில் டிரம்ஸ் வாசித்துள்ளார். 67 இசையமைப்பாளர்களிடம் 900 படங்களில் பணிபுரிந்துள்ளார்.
இந்த 25 வருடத்தில் தமன் 100 படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 2003ம் ஆண்டு பாய்ஸ் படத்தில் 5 பேரில் ஒருவராக நடித்திருந்தார்.
2008ம் ஆண்டு பீபட்சம், மல்லி மல்லி, கிக், ஆகிய படங்களுக்கு இசையமைப்பளராக பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழில் சிந்தனை செய், தில்லாலங்கடி( 2பாடல்), மாஸ்கோவின் காவிரி, ஈரம், அய்யனார், அரிது அரிது, காஞ்சனா, ஒஸ்தி உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் பிருந்தாவனம், தூக்குடு, ஆகடு, வீரா, ஆஞ்சநேயலு, சங்கம், செய்பவா, பிசினஸ்மேன், பாடிகாட், லவ் பெய்லியர், நிப்பு, நாயக், பாகுமதி, இன்டலின்ட், என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் என பல விருதுகளை வென்றுள்ளார் தமன்,
தெலுங்கில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் தமனின் 25 வருட சினிமா பயணம் நிறைவடைந்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.