Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் குதிக்கும் ஸ்ரீரெட்டி?

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:47 IST)
நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். திடீரென ஒருநாள் தன் மேலாடையை அகற்றி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன், யார் யாரெல்லாம் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் ட்விட்டரில் ஒரு லிஸ்ட் வெளியிட்டார். 
 
இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு நடிக்க தடை விதித்தது. ஸ்ரீரெட்டிக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 20 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதனையடுத்து, தெலுங்கு நடிகர் சங்கம் அவர் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது.
 
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து கருத்தரங்களில் பேசுகிறார். மேலும், பெண்கள் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.
 
அந்த வகையில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த பெண்களை தீடிரென நிறுத்தியதற்கு எதிராக ஸ்ரீசைலம் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் ஸ்ரீரெட்டி அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து சமூக சேவைகள் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்