Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னை ஓங்கி அறையப் போறேன் : நடிகர் மீது ஸ்ரீரெட்டி காட்டம்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (10:14 IST)
தன் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுத்த நடுகரும், இயக்குனருமான வராகியை அறையப் போகிறேன் என ஸ்ரீரெட்டி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.  
 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறையிடவும் அவர் முயன்று வருகிறார். 
 
ஆனால், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து, கோபமான மற்றும் விரக்தியான கருத்துகளை ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றுகு அளித்த பேட்டியில் “மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால், நான் தன்னந்தனியக போராடி வருகிறேன். என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. என்னை ஒரு விலைமாது போலவே தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். எனக்கான நீதி கிடைக்காவில் தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறுவழியில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.
 
மேலும், இன்று தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப்போகிறேன். அதற்கு நீ தகுதியானவன்தான். பாதிக்கப்பட்ட எனக்கு மரியாதை கொடுக்கவில்லை. அதற்கு பதில் நீ என் மலத்தை சாப்பிடலாம். என்ன ஒரு கேவலமான விளம்பரம். தூ” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இதுதான்!

பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளையராஜா!

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்