Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்: தமிழ் எம்பிக்கள் விஜய்க்கு கடிதம்..!

Advertiesment
இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்: தமிழ் எம்பிக்கள் விஜய்க்கு கடிதம்..!
, புதன், 18 அக்டோபர் 2023 (12:36 IST)
‘லியோ’ திரைப்படம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் 20-ம் தேதி மற்றும் ‘லியோ’ திரைப்படம் இலங்கையில் திரையிட வேண்டாம் என விஜய்க்கு இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர் 
 
இலங்கை சேர்ந்த நீதிபதி சரவணன் ராஜா என்பவர் இலங்கை அரசின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு நீதி கோரி 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை தமிழ் எம்பிக்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 
 
போராட்டம் நடைபெறும் நாளில் ‘லியோ’ திரைப்படம்  திரையிட்டால் போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் எனவே லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்கள் உங்களுக்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில் 20 ஆம் தேதி மட்டும் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் லியோ படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 
 
இதற்கு விஜய் என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்ட விரோதமாக இணையதளங்களில் ’லியோ’ திரைப்படம்: ஹைகோர்ட் முக்கிய உத்தரவு..!