Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீ ரெட்டி

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (13:26 IST)
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ்  திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் அடுத்து நடிகர்களின் பெயரை வெளியிட்டு வருகிறார். அதன்படி அவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குநர் முருகதாஸ்,  ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றன. இதையடுத்து தன் பெயரை நடிகை ஸ்ரீரெட்டி பயன்படுத்தியதால் அவர் மீது  வழக்கு தொடர்வேன் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார். அடுத்து அவரது பட்டியலில் நடிகர் ஆதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி முகநூல் பதிவில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறினார். ஆனாலும், கோலிவுட்டின்  இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். சமீபத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் தான் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
 
தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள போட்டியில், விஷாலிடம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டுள்ளார். மேலும் நடிகைகளுக்கு நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்டும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களால்தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என  வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்