Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் வேறு தொழிலே இல்லையா? - ஸ்ரீரெட்டியின் பதில் என்ன தெரியுமா?

Advertiesment
ஏன் வேறு தொழிலே இல்லையா? - ஸ்ரீரெட்டியின் பதில் என்ன தெரியுமா?
, வியாழன், 19 ஜூலை 2018 (16:02 IST)
சினிமா வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொண்டதற்கு பதில் வேறு வேலையை செய்யவில்லை என்கிற கேள்விக்கு ஸ்ரீரெட்டி பதிலளித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.   
 
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த போதெல்லாம் நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி “நான் கடந்த 10 வருடங்களாக பெற்றோரை பிரிந்து வாழ்கிறேன். என்னிடம் அவர்கள் பேசுவதில்லை. உணவு, வாடகை, மாத தவணைகள் என எனக்கு கடமைகள் இருக்கிறது. எத்தனை நாளைக்கு நான் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க முடியும். அந்த சூழ்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக நான் அந்த தவறை செய்ய வேண்டியதாயிற்று” எனக் கூறினார்.
 
அதற்கு, வேறு தொழில்கள் மற்றும் வேலைகள் இருக்கிறதே? அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கலாமே? என செய்தியாளர் கேட்க, கோபமடைந்த ஸ்ரீரெட்டி “எனக்கு கிளாமர் துறைதான் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. என கனவு குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. நான் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என மற்றவர்கள் முடிவெடுக்கக் கூடாது” என காட்டமாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கையை பகிர ஏன் ஒத்துக் கொண்டீர்கள்? - ஸ்ரீரெட்டி பதில்